துறைமுக மாலுமிகளுக்கான பாதுகாப்பு திட்டத்தின் புதிய கண்டுபிடிப்பு

திடீர் வானிலை மாற்றத்தினால் கடல் சீற்றம் அல்லது கடல் கொந்தளிப்பு ஏற்படும்போது கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் வணிக கப்பலோடு படகையும் சேர்த்து கட்டி பயணிக்க வைத்தால் எப்படி இருக்கும், அப்படி கப்பலோடு கட்டப்பத்திருந்த படகில் இருந்து மனிதர்கள் இக்கட்டான சூழ்நிலையில் அவசர வேலைக்காக கப்பலுக்கு ஏணிப்படியின் மூலம் ஏறி இறங்கினால் எப்படி இருக்கும்.

இது ஒரு திடீர் சீற்றம் கொண்ட கடலில் பயணிக்கும் கப்பலில் அவசரகாலத்தில் படகில் இருந்து கப்பலுக்கு செல்லும் மரின் பைலட் மற்றும் பொறியாளர் கப்பல் ஊழியர்கள் என கப்பலின் கயிற்று ஏணியை பயன்படுத்தும் அனைவரின் பாதுகாப்பிற்கான ஒரு யோசனையை இங்கு எழுதியுள்ளேன்.

மேலே காட்டியிருக்கும் படம் ஒரு கற்பனையே இதன் விரிவான விளக்கம் மற்றும் வரைபடத்துடன் கீழே கொடுத்துள்ளேன் விருப்பமுள்ளவர்கள் மேற்கொண்டு படிக்கவும் இது என்னுடைய முதல் படைப்பு என்பதால் வரைபடங்கள் அதிகமாக இருப்பதாக உங்களுக்கு தோன்றலாம்

மரின் பைலட் பாதுகாப்பு;

கப்பலில் உள்ள கயிற்று ஏணியை பலரும் பயன்படுத்தினாலும் பெரும்பாலும் மரின் பைலட் தான் அடிக்கடி பயன்படுத்துவார் ஆகையால் நான் மற்றவர்களை பற்றி இதில் குறிப்பிடவில்லை மரின் பைலட்டை மட்டும் எடுத்தக்காட்டாக குறிப்பிட்டு காட்டியுள்ளேன் இந்த மரின் பைலட்டுகள்  கப்பலில் ஏறும் போதும் இறங்கும் போதும் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் அவர்களுக்கு நடந்திருக்கும் ஒரு சில விபத்துகள் பற்றியும்  அதற்குண்டான தீர்வாக என்னுடைய மனதில் உதித்த கற்பனையில் நான் கண்டுணர்ந்த காட்சிகளை எனக்கு தெரிந்த மொழியில் என்னுடைய யோசனைகளை இதில் எழுதியுள்ளேன்.

இதில் எழுத்து பிழை மற்றும் இலக்கண பிழை எதுவும் இருந்தால் அதை பெரிது படுத்தி பார்க்காமல் அதை விடுத்து நான் சொல்லும் இந்த பாதுகாப்புக்குண்டான யோசனையின் கருத்தை மட்டும் எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகிறேன்.  

அதாவது எனக்கு கடல் சார்ந்த துறை பற்றி அதிகம் தெரியாது கடல் சார்ந்த துறையில் CAPTAIN மற்றும் PILOT என்று பெயர்கள் வழக்கத்தில் இருக்கிறது இவர்கள் இருவருக்கும் தனித்தனியே பொறுப்புகள் இருக்கிறது அவர்கள் யார் அவர்களின் பொறுப்புகள் என்னென்ன என்று இந்த கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் ஆனால் எனக்கு உங்களை விட குறைவாகவே அவர்களை பற்றி தெரிந்திருக்கும் வாய்ப்பும் உண்டு.  

இருந்த போதிலும் நான் அவர்களை பற்றி எவ்வாறு புரிந்து கொண்டுள்ளேன் என்பதையும் அவர்களின் பணி எப்படி இருக்குமென்றும் எனக்கு நானே ஒரு புரிதலை புரிந்துகொண்டுள்ளேன் என்பதை இங்கு சுருக்கமாக தெரிவித்து விடுகிறேன்,

நீங்கள் நினைக்கலாம் இவருக்கு இந்த துறையைப்பற்றி தெரியாது அப்படி இருக்கும் பொழுது இந்த துறையில் நடக்கும் சிக்கலுக்கு இவரால் எப்படி ஒரு தீர்வு கொடுக்க முடியும் என்றும், ஒரு வேலை அப்படி இவர் தீர்வாக ஒரு யோசனையை சொன்னாலும் அது ஏற்க தக்கதாக இருக்காது என்று நினைக்கலாம்.

அப்படி எண்ணுபவர்களுக்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன் எந்த ஒரு சிக்கலுக்கும் அந்த துறையில் சம்பந்தப்பட்டவர்கள் தான் தீர்வு காணவேண்டுமென்று கிடையாது மாறாக ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்ட எந்த ஒரு மனிதனாலும் எந்த ஒரு துறையில் நடக்கும் சிக்கல்களுக்கும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து தீர்வு காண முடியும் ஆகையினால் நான் கொடுக்கும் இந்த தீர்வு நடைமுறைக்கு ஒத்து வருமா சாத்தியமா அல்லது இந்த தீர்வினால் நன்மை நடக்கிறதா இல்லையா மற்றும் இந்த தீர்வினால் ஏற்படும் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்று பரிசோதனை செய்து பார்த்து செயல்முறை படுத்தினால் தான் தெரிய வரும், ஒரு வேலை நான் மேலே கூறியது போல சாத்தியமில்லையென்றால் அதை விடுத்து வேறு முயற்சிகள் செய்யலாம்.  

எந்த ஒரு காரியத்தையும் முயற்சி செய்யாமல் முடிவெடுத்தால் இந்த உலகத்தில் மனிதனை தவிர மற்ற இனங்கள் அனைத்தும் முன்னேற்றம் கண்டிருக்கும் மனித இனம் மட்டும் அறிவு வளர்ச்சியில் முன்னேறாமல் பின்தங்கிய நிலையில் இருந்திருக்கும் இப்பொழுது நாம் காணும் இந்த உலகம் எல்லாம் ஒவ்வொரு மனிதர்களின் முயற்சியும் தோல்வியும் தான்,  இல்லையென்றால் இவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்காது என்று தான் என்னால் கூற முடியும்.  

மரின் பைலட் மற்றும் கேப்டன் இவர்களை பற்றி எனது புரிதல்:

நான் சிறுவனாக இருக்கும் பொழுது பெரியவர்கள் அடிக்கடி இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள், அதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது உள்ளூர்காரன் பேயிக்கு பயப்படுவான் அசலூர்காரன் தண்ணீருக்கு பயப்படுவான் இதற்கு என்ன பொருள் என்று நான் வளர்ந்த பிறகு தான் எனக்கு தெரியவந்தது.

அதாவது ஒரு கூட்டமான நாடோடிகளானவர்கள் தனது பயணத்தில் காடு, மலை என அனைத்து இடங்களிலும் இரவில் தங்கி தனது பயணத்தை தொடறுபவர்கள், அப்படி அவர்கள் கடந்து செல்லும் பாதையில் ஒரு சில சமயங்களில் இடுகாடு மற்றும் சுடுகாடு கூட வருவதுண்டு.

அந்த சமயத்தில் பொழுது அடைந்து விட்டால் அதாவது சூரியன் மறைகிறது இருட்டப்போகிறது என்றால், அவர்கள் சேர வேண்டிய இலக்கு அதிக தொலைவாக இருப்பதினாலும் நடந்து வந்த களைப்பினாலும், அந்த சுடுகாட்டில் கூட இரவு படுத்து உறங்கி காலை தனது பயணத்தை தொடருவார்கள்.

அப்படி அவர்கள் பயணிக்கும் பொழுது இடையில் நதி அல்லது குளம், குட்டை, ஏரி, என்று நீர் பகுதி வந்தால் அதில் அவர்கள் கரையோரமாக நின்று குளிப்பார்கள் அல்லது தனக்கு தேவையான செயல்களை எல்லாம் கரையோரமாக நின்று தான் செய்வார்கள்,

அவர்களுக்கு நீச்சல் தெரிந்தாலும் கூட தண்ணீருக்குள் இறங்க மாட்டார்கள், ஏன் என்றால் அங்கு கண்ணுக்கு தெரியாத ஆழத்தில் என்னென்ன ஆபத்து இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியாது,

அதே சமயத்தில் அந்த இடத்திற்கு ஒரு உள்ளூர்காரர் யாராவது வந்தால் அவரின் உதவியோடு தண்ணீருக்குள் இறங்குவார்கள். 

இவர்கள் தன்னுடைய கண் எதிரே தெரியும் காட்சிகள் கண்ணெதிரே நடக்கும் செயல்களின் உண்மை தன்மையை தெளிவாக புரிந்து கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்வார்கள்,

அதே சமயத்தில் தனக்கு பழக்கமில்லாத இடத்தில் கண்ணுக்கு தெரியாத தண்ணீருக்குள் யார் துணையும் இல்லாமல் செல்லமாட்டார்கள் எச்சரிக்கை உணர்வோடு கரையோரமாகவே இருந்து தனது தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.  

இது போலவே உள்ளூர்காரருக்கு தண்ணீருக்குள் எந்த ஒரு பயமும் இருக்காது ஏன் என்றால் அது அவர்களுக்கு பழக்கமான இடமாக இருக்கும் அவர் சிறு வயது முதல் அந்த குளத்தில் அல்லது நதியில்  குளித்திருப்பார் நண்பர்களோடு விளையாடியிருப்பார்கள்.

ஆனால் தனது ஊரில் உள்ளவர்கள் எத்தனை நபர்கள் இறந்தார்கள் எப்படி இறந்தார்கள் என்பது அவருக்கு முன்னரே தெரிந்த விடயமாகும் அல்லது அவரது ஊரில் உள்ள பெரியவர்கள் சொல்லிய விடயமாக இருந்திருக்கும்.

அவர் சிறுவனாக இருக்கும்போது ஊர்க்காரர்கள் கதை கதையாக பேய் கதை சொல்லியிருப்பார்கள் அதாவது இந்த இடத்தில் தான், இவன் தூக்கு போட்டு இறந்தான் இந்த இடத்தில் தான், இவள் விஷம் குடித்து இறந்தாள் எனவும் ஆகையால் அவர்கள் பேயாக இன்னமும் இங்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று முக்குக்கு முக்கு தெருவுக்கு தெரு பேய் கதை சொல்லி பயமுருத்தியிருப்பார்கள்,

இந்த கதைகள் எல்லாம் அந்த உள்ளூர்காரர் மனதில் ஆழமாக பதிந்து இருக்கும் இதனால் தான் அவர் பேயிக்கு பயப்படுவார் தண்ணீருக்கு பயப்படமாட்டார்.

அது போலவே நடுக்கடலில் கப்பலை திறம்பட ஓட்டுபவர் கேப்டன் ஆவார், கப்பல் நடுக்கடலில் ஓடும் போது இவரது கட்டுப்பாட்டில் கப்பல் இருக்கும்.

கரை ஓரம் மற்றும் துறைமுகத்தில் கப்பலை ஓட்டுபவர் அல்லது வழிநடத்துபவர் மரின் பைலட் ஆவார்.

கப்பலானது நடுக்கடலில் செல்லும்போது கேப்டன் கட்டுப்பாட்டில் இருக்கும், அதே கப்பல் ஒரு துறைமுகத்திற்கு செல்லவிருக்கிறதென்றாள் அந்த கப்பல் துறைமுகத்திற்கு பக்கத்தில் வந்த உடன் இந்த பைலட் கட்டுப்பாட்டிற்கு வந்து விடும் இது தான் நான் புரிந்துகொண்டது. 

இப்பொழுது என்னுடைய புரிதலின்படி இந்த கேப்டனை நான் கப்பலோட்டி என்றும் மரின் பைலட்டை நான் உள்ளூர் மாலுமி என்றும் புரிந்துகொண்டு அடுததகட்டத்திற்கு செல்கிறேன். 

சரி இந்த உள்ளூர் மாலுமியான மரின் பைலட் என்பவருக்கு என்னென்ன ஆபத்து இருக்கிறது என்று பார்போம்.

இந்த உள்ளூர் மாலுமியானவர் தனது துறைமுகத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் தெரிந்து வைத்திருப்பார் அதாவது கடலின் நீரோட்டம், கடலின் கொந்தளிப்பு, காற்றின் வேகம் என அவ்வப்போது உள்ள வானிலை மாற்றங்கள், அனைத்தும் தெரிந்து வைத்திருப்பார் மற்றும் துறை முகத்தில் எந்த இடம் காலியாக இருக்கிறது, துறைமுகத்திற்கு வருகின்ற கப்பலின் எடை எவ்வளவு, அகலம் மற்றும் நீளம் எவ்வளவு, அந்த கப்பலின் கொள்ளளவு என்ன எந்த கப்பலை எங்கு நிறுத்தவேண்டும் என்று பல விடயங்களையும் மிக தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்.

இந்த உள்ளூர் மாலுமிகளில் ஒரு சிலர் நாற்பது வருடம் அனுபவம் உள்ளவர்களும் இருப்பார்கள், இவர்களுக்கு இரவு, பகல் என இருபத்தினாங்கு மணிநேரத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் கப்பலில் இருந்து அழைப்பு வரலாம், வந்த உடனே அவர்கள் கடலின் ஆழமான பகுதியில் இருக்கும் கப்பலை நோக்கி சென்று அந்த கப்பலில் ஏறி கப்பலோட்டிக்கு உடனே உதவி செய்வார்கள், இது தான் இவர்களது பணி,

இந்த இடத்தில் தான் இந்த உள்ளூர் மாலுமிக்கு ஆபத்து ஏற்படுகிறது, அதாவது ஒரு கப்பலை சென்றடைய மாலுமிக்கு இரண்டு விதமான வழிகள் இருக்கின்றது, ஒன்று உலங்கூர்தி (ஹெலிகொப்டர்) மூலம் கப்பலை அடைவது அதாவது இந்த உலங்கூர்தி மூலம் கப்பலை அடைவது என்பது ஒரு சில குறிப்பிட்ட காரணத்திற்கு மட்டும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக கப்பலை சென்றடைய அதிக தூரம் பயணம் செய்வது அல்லது மிக மோசமான வானிலையின் காரணமாக கூட இருக்கலாம்.

மற்றொன்று பைலட் போட் என்ற மாலுமி படகை பயன்படுத்துவது.  இந்த மாலுமி படகை பயன்படுத்துவதில் தான் ஆபத்து இருக்கிறது.

அதாவது படகில் சென்று கப்பலை அடையும் மாலுமிக்கு கப்பலில் உள்ள ஒரு கயிற்று ஏணி மூலமாக தான் கப்பலோட்டி அறைக்கு செல்ல முடியும். இதற்கிடையில் கடலின் திடீர் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம், என பல விதமான இடைஞ்சலுக்கு ஊடே இந்த உள்ளூர் மாலுமியானவர் கயிற்று ஏணியை பயன்படுத்துவார்.

அதில் பல மாலுமிகள் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து விடுவார்கள், அவர்கள் பல பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஒரு சில நேரங்களில் ஒரு சிலர் விபத்தை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, ஒரு சில நேரங்களில், ஒரு சில உள்ளூர் மாலுமிகள் தன்னை அழைத்து கொண்டு வந்து சேர்த்த படகின் மீதே விழுந்து விடுவார்கள். ஒரு சில நேரம் கப்பலில் உள்ள கயிற்று ஏணி அறுந்து கீழே விழுந்தவர்கள் என எத்தனையோ விபத்துகள் நடந்திருக்கின்றன.

இப்படி கீழே விழும் மாலுமியானவர்கள் ஒரு சில நேரம் மூர்ச்சையயாகி மயக்க நிலையில் கடலுக்குள் தன் உயிரை மாய்திருக்கிறார்கள்.

ஒரு சில மாலுமிகள் அப்படி மூர்ச்சையயாகி தண்ணீரில் விழும்போது முன்னோக்கி சென்றுக்கொண்டுருக்கும் கப்பலின் அலையினால் பக்கவாட்டிற்கு தள்ளப்பட்டு பிறகு தண்ணீரின் வேகத்தினால்

பின் பக்கம் இழுக்கப்பட்டு கப்பலின் பின் பக்கமுள்ள சுழல் துடுப்பு என்று சொல்ல கூடிய ப்ரோபெல்லரில் சிக்கி காணாமல் போயிருக்கலாம்,

ஒரு சிலர் கடலில் விழுந்த உடன் படகில் உள்ளவர்களால் காப்பாற்றப்பட்டு கரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்தப்பிறகு வெகு நாள்களாக குணமடையாமல் நடை பிணமாக கூட இருந்திருக்கிறார்கள், ஏன் என்றால் அவர்கள் கீழே விழும் போது அவர்களின் மண்டையில் அடிப்பட்டுருக்கலாம் அல்லது அவர்களின் முதுகெலும்பு பாதிக்கப்பட்டுருக்கலாம் இப்படி எத்தனையோ சம்பவங்களையும் விபத்துகளையும் நாம் கடல் சார்ந்த செய்திகளில் பார்க்க முடியும். 

கீழே விழும்போது மாலுமி படகின் மீது மண்டை மோதும் காட்சி

கீழே விழும்போது மாலுமி படகின் மீது முதுகுபகுதி மோதும் காட்சி

மூர்ச்சையயாகி கீழே விழுந்த மாலுமி ப்ரோபெல்லர் என்று சொல்லக்கூடிய சுழல் துடுப்பை நோக்கி இழுத்துச்செல்லப்படும் காட்சி

சரி இப்படி இவ்வளவு திறமையும் அனுபவமுள்ள மாலுமிகளை பாதுகாக்க அரசாங்கமோ அல்லது துறைமுகத்தை சார்ந்த நிறுவனங்களோ அல்லது வேறு ஒரு சில தனியார் அமைப்புகளோ எந்த ஒரு நடவடிக்கையும் அல்லது இந்த சிக்கலுக்குண்டான தீர்வாக எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர புதுமையாக எந்த ஒரு செயலையும் செய்து இருக்கிறதா என்றால் முயற்சிகள் ஏராளம் செய்திருக்கிறது, அவைகளெல்லாம் கடலில் சீற்றமில்லாத நேரத்தில் செயல்பட கூடிய உபகரணங்களாகவும் வழிமுறைகளாகவும் உள்ளன ஆனால் நடைமுறையில் சந்திக்கும் சிக்கலுக்குண்டான சரியான தீர்வு இன்னும் கொண்டுவரவில்லை என்று தான் கூற வேண்டும்,

ஆனால் எவ்வளவோ பொருள் செலவிலும் பணச்செலவிலும் இன்னும்  முயற்சிகள் பல எடுத்து கொண்டுதான் இருக்கின்றார்கள் இந்த முயற்சிகளெல்லாம் வரவேற்கத்தக்கதுதான்.  

இருந்தபோதிலும் இன்னமும் ஆங்காங்கே விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. 

சரி இதை நம்மால் சரி செய்து விட முடியுமா என்றால் முடியும் என்று தான் நான் கூறுவேன்,

இதற்கு எளிமையான முறை இருக்கிறது ஆதாவது நமது திருக்குறளில் ஒரு குரல் இருக்கிறது அந்த குறளின் கூற்றானது,

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதனிக்கும் வாய்நாடி      வாய்ப்பச்செய்யல்” 

அதாவது எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு எப்படி காண வேண்டும் என்று உலகில் உள்ள அனைத்து மதங்களும் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படியென்றால் சிக்கல் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும் அதன் பின்னர் அந்த சிக்கல் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது எங்கு ஏற்படுத்துகிறது, எப்பொழுது ஏற்படுத்துகிறது, எப்படி ஏற்படுத்துகிறது, என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

அதன் பின்னர் இந்த சிக்கல் எங்கிருந்து வருகிறது என்று தெரிந்துகொள்ளவேண்டும்,

அதன் பின் இந்த சிக்கல் எதனால் வருகிறது என்றும் இதன் மூலக்காரணம் எது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்,

இவை அனைத்தையும் தெரிந்த பிறகு அந்த சிக்கலுக்குண்டான தீர்வாக, நாம் கொண்டுவரும் மாற்றம் எந்த ஒரு விபரீதத்தையும் பாதிக்கப்பட்டவைக்கும் பாதிப்பை உருவாக்கியவைக்கும் ஏற்படுத்தாமல் பயனுள்ளதாக இருக்கவேண்டும். 

என்று அதில் சொல்லியிருக்கிறது.  

இந்த கூற்றுப்படி பார்த்தால் நமக்கு இப்பொழுது என்ன சிக்கல், இந்த உள்ளூர் மாலுமிக்கு நடக்கிறது என்று தெரிந்துவிட்டது.

இந்த சிக்கலினால் என்ன பாதிப்பு நடக்கிறது என்று தெரிந்துவிட்டது. அதாவது உள்ளூர் மாலுமி உயிர் இலக்க நேரிடுகிறது அல்லது கை கால் முடமாக நேரிடுகிறது அல்லது அவர் தனது வாழ்நாளில் அதிக நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. 

இந்த தவறு எங்கு நடக்கிறது என்றும் தெரியும், அதாவது மாலுமி படகில் இருந்து கப்பலுக்கு ஏறிச்செல்லும் அல்லது இறங்கும் வழிப்பாதையான கயிற்று ஏணியில் நடக்கிறது என்று தெரிகிறது.

எப்பொழுதெல்லாம் மற்றும் எப்படியெல்லாம் இந்த தவறு நடக்கிறது என்று பார்த்தால், அவர் கால் தடுமாறும்போது அல்லது அவரது கையின் பிடி தளறும்போது பகல் நேரமும் நடக்கிறது, இரவு நேரத்திலும் நடக்கிறது, குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக நடக்கிறது.

மற்றும் காற்றின் வேகம் அதிகரித்தாலும், கடல் சீற்றம் அதிகரித்தாலும் நடக்கிறது.

சரி இதற்கான காரணம் என்ன மற்றும் அந்த காரணத்திற்கான மூல காரணம் என்ன என்று பார்த்தால் இந்த சிக்கலுக்குண்டான நிரந்தர தீர்வை நம்மால் கொண்டு வந்து விட முடியும்.

காரணம் ஒன்று : கயிற்று ஏணி பழுதாக்கியிருக்கும், அதை கப்பல் ஊழியர்கள் சரியாக பராமரிக்க தவறியிருக்கலாம், இதனால் கயிற்று ஏணி அறுந்து அதில் பயணிக்கும் நபர் கீழே விழ நேரிடுகிறது,

கயிற்று ஏணி சரியாக பராமரிக்க படாமல் அறுந்து விடுவதால் மாலுமி தவறி விழ நேரிடும் காட்சி. 

காரணம் இரண்டு : கயிற்று ஏணியை பயன்படுத்தும் உள்ளூர் மாலுமியின் கால் சரியாக கயிற்று ஏணியில் பதித்து வைக்க முடியாத அளவிற்கு கயிற்று ஏணியின் அசைவு இருந்தால், இந்த அசைவினால் அவர் தனது பிடியை இழந்து கீழே விழுந்து விடுகிறார், 

மாலுமி கயிற்று ஏணியில் கால் தடுமாறி கீழே விழும் முன் கயிற்று ஏணியை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் காட்சி. 

காரணம் மூன்று : ஒரு வேலை கயிற்று ஏணியில் இருந்து கால் வழுக்கி தடுமாறி கீழே விழுகின்ற உள்ளூர் மாலுமிக்கு பக்கத்தில் பிடிப்பதற்க்கு எந்த ஒரு பிடிதாரமும் இல்லாத காரணத்தினால் நடக்கிறது.  

காரணம் நான்கு : ஒரு சில நேரங்களில் உள்ளூர் மாலுமியானவர்  மெத்தனத்தால் கவச உடை அணிய மறந்திருந்தாலும் நடக்கிறது.  

காரணம் ஐந்து : இரவு நேரத்தில் நடக்கும் விபத்துக்கு முக்கிய காரணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெளிச்சம் இருப்பதாலும் மற்ற இடங்களில் வெளிச்சம் இல்லாமல் இருப்பதாலும் நடக்கிறது.

இந்த காரணத்தை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்காலம் இதற்குண்டான விளக்கத்தை நான் இறுதியில் தனியாக விளக்குகிறேன். 

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெளிச்சமும் மற்ற இடங்களில் இருட்டாக இருக்கும் காட்சி. 

காரணம் ஆறு : கப்பல் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது கப்பலுக்கு பக்கவாட்டில் அலை உருவாகும், இந்த அலையினால் தவறி கீழே விழுந்த நபரை உடனடியாக படகில் உள்ளவர்கள் காப்பாற்றவில்லையென்றால் அவரால் எதிர் நீச்சல் அடிக்க முடியாமல் போனல் பின்னோக்கி சூழல் துடுப்பு என்று சொல்லக்கூடிய ப்ரோபெல்லார் நோக்கி இழுத்து செல்லப்படுகிறார்.

கீழே விழுந்த மாலுமி கப்பலில் இருந்து வரும் அலையை எதிர்த்து நீந்த முடியாமல் சோர்வடைந்து நீந்தும் காட்சி. 

காரணம் ஏழு : உள்ளூர் மாலுமியை கப்பலில் ஏற்றி இறக்க கொண்டுவரும் படகின் படகோட்டியானவர் மாலுமி கயிற்று ஏணியில் கால் பதிக்க தடுமாறுகிறார் என்பதை உணர்ந்து அவருக்கு உதவ நினைத்து மாலுமியின் கால் தன்னுடைய படகின் மீது பதிக்குமாறு படகை கப்பலோடு சேர்த்து ஒட்டி வைக்க முயற்சிக்கும் போது கடல் தண்ணீரின் அலம்பலினால் படகு தள்ளாட்டம் ஏற்பட்டு படகானது மாலுமியின் கால் மீதே படகு மோதி விடுகிறது.

இதற்கு படகோட்டி மீது தவறு ஏதும் இல்லை படகோட்டி மாலுமிக்கு உதவ முயற்சித்தார் அவர் வேண்டுமென்றே இந்த செயலை செய்ய வில்லை.    

உள்ளூர் மாலுமியின் காலில் அவரை கொண்டுவந்த படகு மோதிடும் காட்சி. 

இது போன்ற காரணங்கள் இன்னும் எத்தனையோ இருக்கலாம், நான் என் கண்ணில் பட்டவையை மட்டும் இதில் குறிப்பிட்டிருக்கிறேன். 

இந்த காரணங்களுக்கெல்லாம் மூல காரணம் என்னவென்றால் கடலின் அலைகளும் மற்றும் கடல் சீற்றத்தினால் ஏற்படும் காற்றினாலும் தான், இந்த இரண்டையும் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

அது இயற்கையின் செயல்பாடு, நம்மால் இயற்கையை மாற்றவும் முடியாது இயற்கையை எதிர்த்தும் வாழ முடியாது.

நம்மால் இந்த இயற்கையோடு ஒத்து வாழ முடியும். 

இந்த கடலின் அலையினாலும் மற்றும் எதிர்பாராமல் திடீரென வேகமாக வீசும் காற்றினாலும் நிலையில்லாத தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் கப்பல் மற்றும் படகு தனது சமநிலையை இழக்க நேர்கிறது.

அதிலும் கப்பல் அதிக எடை கொண்டதால் மிகப்பெரிய அலைகள் அல்லது மிகப்பெரிய புயல் என்ற கடினமான சூழ்நிலையில் தான் தனது சமநிலையை அதிகம் இழக்கும், அப்படி கடினமான சூழ்நிலையில்லாமல் இருக்கும் சமயத்தில் தனது சமநிலையை ஓரளவுக்கு தக்கவைத்துக்கொள்ளும்,

ஆனால் மாலுமி படகானது கப்பலை விட எடை குறைவாக உள்ளதால் அதிக தள்ளாட்டம் ஏற்பட்டு சமநிலையை இழந்துவிடுகிறது மற்றும் கப்பலில் உள்ள கயிற்று ஏணியும் தனது சமநிலையை இழக்கும் வாய்ப்பும் உள்ளது.  

சரி நமக்கு சிக்கல் என்னவென்றும் மற்றும் அந்த சிக்கல்களினால் என்னென்ன பாதிப்பு ஏற்படுகிறது என்றும் மற்றும் அந்த சிக்கலுக்கான காரணம் மற்றும் மூலக்காரணம் தெரிந்து விட்டது. இப்பொழுது நாம் இதற்குண்டான தீர்வாக எந்த ஒரு விபரீதமும் ஏற்படா வண்ணம் எளிமையான தீர்வை கொண்டுவருவோம் வாருங்கள். 

அதாவது நிலையில்லா தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கும் கப்பலையும் படகையும் நாம் ஒன்றாக இணைத்து விட்டால், இந்த சிக்கலுக்குண்டான தீர்வு கிடைத்துவிடும். இது தான் நான் சொல்ல வருவது. 

அதாவது மாலுமி படகில் இருந்து கப்பலுக்குள் செல்லும் நபர் அல்லது கப்பலில் இருந்து மாலுமி படகிற்கு செல்லும் நபர் இந்த கயிற்று ஏணியை பயன்படுத்தும் போது மட்டும், நாம் படகையும் கப்பலையும் இணைத்து வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் அந்த கயிற்று ஏணியை பயன்படுத்தி முடித்தவுடன், இந்த இணைந்திருக்கும் இணைப்பை நாம் விடுவித்து விடவேண்டும் இதை நாம் மிக எளிதாக செய்துவிடலாம்.

இது எப்படி சாத்தியப்படுமென்று நீங்கள் கேட்கலாம் முயற்சித்தால் முடியும், நான் கீழே வரைபடத்துடன் கூடிய விளக்கத்தையும் கொடுத்திருக்கிறேன், முயற்சி செய்து பாருங்கள்.

அதில் உள்ள அளவு முறைகள் நான் குறிப்பிடவில்லை, ஏன் என்றால் முதலில் எனக்கு கப்பலின் அளவு மற்றும் படகின் அளவு தெரியாது இன்னொன்று, அப்படியே நான் அந்த அளவு முறைகளை இணையத்தில் தேடி பார்த்து ஏதாவது ஒரு கப்பலின் மற்றும் படகின் அளவை குறிப்பிட்டு இருந்தாலும், ஒவ்வோரு கப்பலுக்கும் மற்றும் படகுக்கும் தனித்தனி அளவுகள் இருக்கலாம், இதனால் நான் ஒரு குறிப்பிட்ட அளவு முறைகளை இதில் குறிப்பிடவில்லை. இந்த விளக்கப்படத்தை பார்க்கும் எந்த ஒரு பொரியாளறும் எளிதில் அவர்களுக்கு தெரிந்த அளவு முறைகளை புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நாம் இதற்காக முதலில் கப்பலில் எந்த பக்கம் கயிற்று ஏணி பயன் பாட்டில் உள்ளதோ, அந்த பக்கம் கயிற்று ஏனிக்கு பக்கத்தில் கப்பலின் குறுக்கே, ஒரு பள்ளமான தளம் அமைத்து அந்த தளத்தில் ஒரு வடக்கயிறு அமைக்கவேண்டும். அந்த வடக்கயிறு கடலின் உப்பு தண்ணீரினால் பாதிக்காத அளவுக்கு உறுதியாக இருக்குமாறு அமைக்கவேண்டும். 

வடக்கயிற்று தளம்

பள்ளமான தளத்தின் உள்ளமைப்பு

இந்த வடக்கயிறு அந்த பள்ளமான தளத்தின் உள்ளே இருந்து கப்பலின் மேல் பகுதியில் ஒரு மின் சக்தியுடன் செயல்படக்கூடிய மோட்டாருடன் இணைக்கப்பட்டிருக்கும், 

இந்த மின் மோட்டாரானது வடக்கயிற்றை தளர்வாக்கவும் இருக்கமடையவும் செய்யும்.

அந்த வடக்கயிரானது கப்பலின் இடுப்பு பகுதியில் மேலிருந்து கப்பலின் அடிப்பகுதிக்கு கொஞ்சம் மேல் வரைக்கும் வெளியில் தெரியாதவாறு அமைந்திருக்கும்,

இந்த கயிற்றின் நீளம் என்பது ஒரு கப்பல் கடலில் பக்கவாட்டு அலையினால் அதிகபட்சமாக தள்ளாடும் போது, அதாவது இடம் இருந்து வலமாக தள்ளாடி சாயும் பொழுது கப்பலின் இடப்பக்கத்தின் கீழ் பகுதி எவ்வளவு தண்ணீரின் மட்டத்திற்கு மேல் வருமென்பதை கவனித்து கப்பலின் வலது பக்கமுள்ள மேல் பகுதியானது எவ்வளவு தண்ணீர் மட்டத்தை தொடுகிறது என்று பார்த்து அளவிடவேண்டும்

ஒரு கப்பல் அதிகபட்சமாக தள்ளாடி சாயும் காட்சி

அதன் பிறகு கயிற்று ஏணி இருக்குமிடத்தில் கப்பலின் மேல் தளத்தில் ஒரு கப்பி ஒன்று அமைத்து அந்த கப்பியில் ஒரு கயிறு சுற்றி  வைத்திருக்க வேண்டும். இந்த கப்பியில் இருக்கும் கயிறு ஒரு சக்கரத்தில் பல சுற்றுகலாக சுழலப்பட்டு பின், கப்பலின் மேல்தளத்தில் உள்ள தரை பகுதியில் உறுதியாக கட்டியிருக்கும் படி அமைக்க வேண்டும்,   

இந்த சக்கரமானது கையால் மற்றும் மின் மோட்டாரால் சுழல கூடிய சக்கரமாகும், இந்த சக்கரத்தில் பற்கள் உண்டு, இந்த பற்கள் மேல் ஒரு கொண்டி இருக்கும் அந்த கொண்டியானது ஒரு (spring) சுருங்கானுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கொண்டியை நாம் திருப்பினால் சக்கரம் இரண்டு பக்கங்களிலும் சுழலும், அதாவது முன்னும் பின்னும் கொண்டியை நாம் திருப்பவில்லையென்றால், அது பற்சக்கரத்தை ஒரு பக்கம் சுழல விடாத படி பிடித்திருக்கும். அப்பொழுது சக்கரத்தில் சுற்றியிருக்கும் கயிரும் முன்னோக்கி நகராது.

இந்த சக்கரத்தை நாம் மின் மோட்டார் உதவியுடன் கயிற்றின் எடையை மட்டும் இழுக்குமாறு ஒரு அமைப்பு அமைக்கலாம். அது எதற்கென்றாள் இந்த சக்கரத்தில் சுற்றப்பட்ட கயிரானது கப்பி மூலம் கயிற்று ஏணியை பயன்படுத்தும் நபருக்கு முதுகில் உள்ள கொக்கியில் மாட்டியிருக்கும், அப்பொழுது அந்த நபர் கயிற்று ஏணியில் இறங்கும் போதும், ஏறும் போதும் அவருக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்பதற்காக தான் (இதற்க்கு வரைபடம் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்).

இப்பொழுது மாலுமி படகில் ஒரு கவ்வி ஒன்று அமைக்க வேண்டும் அந்த கவ்வியானது வடக்கயிற்றை பற்றி பிடிக்கவேண்டும் மற்றும் வடக்கயிற்றுடன் கப்பலில் உள்ள தளத்தில் பொருந்திய பிறகு வடக்கயிற்றை பற்றி பிடித்து மேலும் கீழும் நகர்ந்து செல்ல கூடிய வட்டுடன் கூடிய அமைப்புடன் இருக்குமாறு உருவாக்க வேண்டும்.

மற்றும் படகானது கப்பலில் இருந்து வரும் அலையினால் முன்பக்கமும், பின்பக்கமும், மேலும், கீழும், என அசைவு கொடுக்குமாறும் மற்றும் பக்கவாட்டு அலையினால் வலது பக்கமும், இடது பக்கமும், மேலும், கீழும், என அசைவு கொடுக்குமாறும், எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அசையவும், திரும்பவும், அமைப்புடன் கூடிய கவ்வியை உருவாக்கவேண்டும்.  

கவ்வி

இந்த கவ்வியில் வடக்கயிற்றை மாட்டிய உடன் அந்த வடக்கயிரானது இலகுவாக சுழலும் மூன்று பள்ளமான வட்டுகளுக்கு இடையே சொறுகப்பட்டிருக்கும், அப்பொழுது இந்த வடக்கயிற்றை கப்பலில் உள்ளவர்கள் இறுக்கமடைய செய்த உடன், வடக்கயிரானது படகில் பொருத்தியிருக்கும் கவ்வியை இழுத்துக்கொண்டு கப்பலில் உள்ள பள்ளமான தளத்தில் பொருந்திவிடும்.

பிறகு, வடக்கயிறு இறுக்கமடைய இறுக்கமடைய கவ்வியில் இருக்கும் நடுச்சக்கரம் வடக்கயிற்றினால் அழுத்தப்படும், அப்பொழுது அந்த நடுச்சக்கரம் சிறிது நகர்ந்து, கீழே உள்ள சுருங்கானை (spring) அழுத்தமடைய செய்யும், அப்பொழுது அந்த சுருங்கானில் பொருத்தப்பட்டிருக்கும், இரு கம்பிகள் கவ்விக்கு வெளியே தள்ளப்படும் அப்படி தள்ளப்பட்ட கம்பிகள் கப்பலில் உள்ள பள்ளமான தளத்தில் உள்ள தடுப்பு சுவரில் கொண்டி போல செயல்படும். அதாவது கப்பலோடு இணக்கப்பட்ட படகு கயிறு இறுக்கமாக இருக்கும் வரை இந்த சுருங்கான் கொண்டியை உள்ளிலுக்காது அப்போது படகு கப்பலை விட்டு தனியே பிரிந்து செல்லாது.

மேலும் கப்பல் வலது பக்கமும், இடது பக்கமும், ஆடும் பொழுது அதாவது தள்ளாடும் பொது படகானது கப்பலின் அசைவுக்கு ஏற்ப மேலும் கீழுமாக செல்லவேண்டும். அதற்காக இந்த வடக்கயிற்றை பற்றியிருக்கும் பள்ளமான வட்டுக்கள் அந்த வடக்கயிற்றை பற்றி பிடித்தபடி வடக்கயிற்றின் மீது உருளும், இதனால் படகு வடக்கயிற்றின் மேலேயும், கீழேயும், ஒரு பிடிப்புடன் சுழன்று நகர்ந்து செல்லும். 

ஒரு முறை இந்த வடக்கயிறு தளர்வாக்கப்பட்டவுடன் கவ்வியில் உள்ள சுருங்கான் கம்பியை உள்ளிலுத்து விடும் கொண்டி பக்கவாட்டு சுவற்றை தடுக்காமல் இருக்கும். இதனால் படகும் கப்பலை விட்டு தனியாக விலகி விடும்.

இந்த வடக்கயிறு கப்பலில் ஒரு பள்ளமான பகுதியில் மேல் இருந்து கீழாக பதிந்து இருக்கும், அது வெளியில் பார்பதற்கு தெரியாது அந்த அளவு சமதளமாக இருக்கும்.

இப்படி ஒரு அமைப்பை நாம் செய்து விட்டால் படகில் இருந்து கப்பலுக்கு ஏறவும், இறங்கவும், பயன்படுத்தும் நபர்களுக்காக படகு கப்பலை நெருங்கிய உடன் கப்பலில் உள்ளவர்கள் வடக்கயிற்றை தளர்வாக தளர்த்துவார்கள், அந்த நேரத்தில் மாலுமி படகில் உள்ளவர் இந்த வடக்கயிற்றை தனது படகில் உள்ள ஒரு கொக்கியில் இழுத்து தனது படகில் உள்ள கவ்வியில் மாட்டி விடுவார்.

பின்னர் கப்பலின் மேல் தளத்தில் உள்ளவர்கள் இந்த வடக்கயிற்றை இறுக்கமடைய செய்வார்கள். அப்பொழுது அந்த கவ்வியில் மாட்டியிருக்கும் வடக்கயிறு கப்பலோடு இருக்கமடையும்போது வடக்கயிற்றுக்கு கீழே இருக்கும் இரு கொண்டிகள் வெளிவந்து கப்பலின் பள்ளமான தளத்தை பிடித்து கொள்ளும்.

பின்னர் படகு கப்பலுடன் சேர்த்து இணைக்க பட்டு விடும். 

அதன் பிறகு கப்பலின் மேலே உள்ளவர்கள் கயிற்று ஏனியின் மேல் இருக்கும், கப்பியின் மூலம் ஒரு கயிற்றை கீழே இறக்குவார்கள், இந்த கயிற்றை மாலுமி தனது முதுகு பகுதியில் கழுத்துக்கு கீழே உள்ள பட்டையின் கொக்கியில் மாட்டிக்கொள்வார்.

இப்பொழுது படகு கப்பலுடன் இணைக்கப்பட்டு விட்டது, மாலுமியும் பாதுகாப்பு கயிற்றை தனது முதுகில் உள்ள கொக்கியில் மாட்டி விட்டார். இதற்கு பிறகு மாலுமி பயமில்லாமல் கப்பலின் கயிற்று ஏணியில் கால் பதித்து ஏறுவார்.

பாதுகாப்பு கயிற்றுடன் உள்ளூர் மாலுமி கயிற்று ஏணியில் ஏறும் காட்சி.    

இதில் கடல் கொந்தளிப்பு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, கயிற்று ஏணி எவ்வளவு ஆட்டம் கண்டாலும் சரி, மாலுமி தன் பிடியை இழக்க மாட்டார், ஒரு வேளை அப்படி கால் தவறி கீழே விழுந்தாலும், முதுகில் மாட்டி இருக்கும் பாதுகாப்பு கயிரானது அவரை காப்பாற்றி விடும்,

இங்கு இந்த பாதுகாப்பு கயிரானது ஒரு பக்கமாக செயல்படும் அமைப்பு கொண்டது, அதாவது மாலுமி ஒவ்வோரு படியாக மேலே ஏறும் பொழுது பாதுகாப்பு கயிரும் மேலே இழுக்க படும், அதாவது கயிற்றின் பாரம் எவ்வளவோ அவ்வளவு தான் மேலிலுக்கப்படும். அதற்கு அதிக படியான பாரம் மேலிலுக்கபடாது. இதனால் அந்த பாதுகாப்பு கயிரானது மாலுமிக்கு இடைஞ்சலாக இருக்காது, ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்தனால் மாலுமி கீழே விழ நேரிட்டாலும், மாலுமி எவ்வளவு தூரம் கயிற்று ஏணியில் எறியிருந்தாரோ, அவ்வளவு தூரத்தில் இருந்து அவர் சர சர வென்று கீழே விழமாட்டார், மாறாக இந்த பாதுகாப்பு கயிற்றில் மாலுமியானவர் எவ்வளவு தூரம் மேலே சென்றாரோ அவ்வளவு தூரத்தில், அதே உயரத்தில், அவர் தொங்கிக்கொண்டிருப்பாரே தவிர கீழே விழ மாட்டார், அவரை மற்றவர்கள் உடனே மேலிருந்து இழுத்து காப்பாற்றி விடலாம்.

பாதுகாப்பு கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் உள்ளூர் மாலுமி.

மற்றும், படகும், கப்பலுடன், கப்பலின் வலம் இடம் அல்லது முன் பின் அசைவுக்கு ஏற்ப மேலே கீழே என தராசு போலவும் அசைந்து கொடுக்கும், ஒரு போதும் கப்பலை விட்டு விலகாது.

பின்னர் மாலுமி கப்பலின் மேல் தளத்திற்கு சென்ற பிறகு, அல்லது கப்பலில் இருந்து படகுக்கு மாலுமி வந்த பிறகு, கப்பலில் உள்ள கேப்டன் அல்லது கப்பலில் உள்ளவர்கள் வடக்கயிற்றை தலர்த்தி விடுவார்கள், படகும் தனது பிடியை வடக்கயிற்றில் இருந்து விடுவித்து விடும், இதனால் விபத்தும் தவிர்க்கப்படும்.

இங்கு நான் குறிப்பிட்ட செயல்களை செய்ய அதிக நேரம் தேவைபடுமென்று நினைக்கவேண்டாம், படகை கப்பலோடு இணைக்க படகில் உள்ள கவ்வியில், கப்பலில் உள்ள வடக்கயிற்றை மாட்ட வேண்டும். இதற்கு அதிகப்படியான நேரம், ஒரு நிமிடம் தான் ஆகும். இந்த ஒரு நிமிடத்திற்குள்ளே குறைவான நேரத்திலேயே முடிந்து விடும்,

பிறகு எப்பொழுதும் நடப்பது போல உள்ளூர் மாலுமியானவர் ஏணிப்படியில் ஏறுவார், அவர் கப்பலின் மேல் தளத்திற்கு சென்ற உடன் படகை கப்பலின் இருந்து தனிமைப்படுத்த அரைநிமிடம் ஆகும் அவ்வளவுதான், ஏன் என்றால் கவ்வியில் இருந்து கயிற்றை கழட்டி விட வேண்டும், இதற்கு அதிக பட்சமாக அரை நிமிடம் போதும்.

இதில் கப்பலில் உள்ள வடக்கயிற்றை இருக்கவும் தளர்த்தவும் அதிக படியாக இரண்டு நிமிடங்களாகலாம் என்று நினைக்கிறேன், ஏன் என்றால் இந்த வடக்கயிற்றை இருக்கமாக்கவும், தளர்வாக்குவதற்க்கும், நாம் மின் சுழற்றியை (மின்சார மோட்டாரை) பயன்படுத்த போகிறோம்  ஆக மொத்தம் இரண்டரை அல்லது மூன்று நிடத்திற்குள், இந்த வேலைகளெல்லாம் முடிந்துவிடும், இது என்னுடைய ஊகம் தான் நான் ஊகித்த நேரத்திற்கு முன்னதாகவே முடிந்துவிடலாமென்று நினைக்கிறேன். 

இந்த முறை மாலுமிக்கு மட்டும் தேவைப்படும் என்று இல்லை, ஒரு சில நேரங்களில், நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும், கப்பலுக்கு பணி நிமித்தமாக, அல்லது கப்பல் பழுதுயடைந்துவிட்டால், அந்த கப்பலில் உள்ள குறையை நிவர்த்தி செய்ய, ஒரு சில வேலையாட்கள் அல்லது பொறியாளர்கள் கூட, இப்படி கயிற்று ஏணி யின் மூலம் பயணிப்பதுண்டு, அவர்களுக்கும் இப்படி விபத்து ஏற்ப்பட்டதுண்டு அவர்களும் இதனால் பயன் பெறலாம். 

மற்றும், இந்த வடக்கயிறு கட்டியிருக்கும் இடத்தில் கப்பலின் மேல் பகுதியில் மட்டும் ஒரு தடுப்பு கவசம் அமைக்க வேண்டும், ஏன் என்றால் நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும், கப்பலில் கடல் கொள்ளையர்கள், கப்பலில் உள்ள வடக்கயிற்றை பற்றி பிடித்து மேலே ஏறி வந்தாலும், இந்த தடுப்பு கவசத்தை தாண்டி மேல் தளத்திற்கு வரமுடியாதவாறு ஒரு கவசம் அமைக்க வேண்டும்.

இந்த கவ்வி அமைப்பை நாம் படகில் வலது மற்றும் இடது பக்கத்தில் மாட்டியிருப்போம், இந்த கவ்வி அமைப்பால் படகின் வேகம் குறைந்து விடக்கூடாது, அதனால் அந்த கவ்வி அமைப்பின் மேல் ஒரு கவசம் அமைக்க வேண்டும், அந்த கவசமானது படகில் மோதும், காற்றை தடுக்காமல் ஊடுருவி செல்லும் அளவிற்கு அமைத்திருப்பது, நல்லது இந்த கவசம் கவ்வி கப்பலில் பொருந்தும் போது படகை ஒட்டி அமுங்கி கொள்ளும்.

நான் மேலே கூறிய இரவு நேர விபத்து பற்றி இதில் ஒரு சில எடுத்துக்கட்டுகளை தெரிவிக்க விரும்புகிறேன் பொதுவாக விபத்து என்பது ஒரு நொடிப்பொழுதில் ஏற்படும் சூழ்நிலை மாற்றத்தினால் உருவாகும் நிகழ்வவாகும், கவனகுறைவு, அல்லது மெத்தனம், அல்லது அசட்டுத்தனம், அல்லது தவறான கணிப்பு, என்று வைத்து கொள்ளலாம், இவற்றினால் தான் ஏற்படுகிறது,

நாம் அனைவரும் சிறு வயது முதல் ஏதாவது நமக்கு பிடித்தமான உணவு அல்லது உணவுப்பண்டம் தின்று இருப்போம், இப்பொழுது நாம் வளர்ந்த உடன் பல வருடம் கழித்து, அதே சுவையுள்ள உணவு அல்லது உணவுப்பண்டமானது, நமக்கு உண்ண கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த உணவை உண்ணும்பொழுது, ஏதாவது ஒரு நொடி பொழுதில், நாம் நமது சிறுவயதில் இருந்த சூழ்நிலைக்கு சென்று விடுவோம்.

ஏன், என்றால் நாம் சிறு வயதில் உண்ட, அந்த நமக்கு பிடித்தமான உணவு, நமது உடலில் உள்ள நாடி, நரம்புகளில், எல்லாம் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது. அப்பொழுது, அந்த நேரத்தில் நமக்கு ஏற்பட்ட சூழ்நிலைகளை, நமது உள்ளுணர்வு நமக்கு காட்சிகளாக, நமக்கு உணர்த்துகிறது.  

அது போல சிறு வயதில் நமக்கு பிடித்த அல்லது பிடிக்காத ஏதாவது ஒரு பாடல்களை நாம் கேட்டிருப்போம், அதே அந்த பழைய பாட்டை நாம் வளர்ந்த உடன், இப்பொழுது எங்காவது, ஒரு இடத்தில் நாம் கேட்க நேர்ந்தால், ஏதாவது ஒரு நொடி பொழுதில் நமக்கு, நாம் சிறுவயதில் இந்த பாடலை கேட்டபொழுது, என்ன உணர்வுகள் நமக்கு தோன்றியதோ, அதே உணர்வு தற்பொழுது ஏற்படுவதை நம்மால் கவனிக்கமுடியும்.   

இதே போல, நாம் நமது வீட்டில் குடும்பத்துடன் தொலைகாட்சியில் நமக்கு பிடித்த ஏதாவது ஒரு காணொளியை சுவாரசியமாக, நாம் பார்த்துகொண்டிருக்கும்பொழுது திடீரென திரும்பி பார்த்தால், பக்கத்தில் உள்ளவர்கள், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை கவனித்திருப்பீர்கள், நமக்கு நாளை விடுமுறை வேலைக்கு செல்லவேண்டாம், ஆகயினால் இன்று நேரம் போவது கூட தெரியாமல், நாம் காணொளியில் மூழ்கியிருப்போம்,

இப்பொழுது, இதே உணர்வு தான் நாம் வேறு எங்காவது ஒரு இடத்தில் இதே போன்று, ஒரு இரவு நேரத்தில் வேறு ஏதாவது ஒரு இடத்தில் காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது கூட ஏதாவது ஒரு நொடி நமது மனம் மற்றும் உள்ளுணர்வு நமது வீட்டில் உட்கார்ந்து தொலைக்காட்சியை பார்த்த பழைய சூழ்நிலைக்கு நம்மை கொண்டு சென்றுவிடும். 

பல வருடங்களாக, ஒரே வேலையை செய்யும் ஒரு மனிதர் தனது வேலையில், மிக திறமை வாய்ந்தவராக இருக்க முடியும், ஏன் என்றால், அந்த வேலை, அவரது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், அந்த வேலைக்கு ஏற்றார் போல, தன்னை மாற்றிக்கொள்ளும் மனமும் அப்படித்தான், அந்த வேலையை அவர் மிக துல்லியமாக, மிக நேர்த்தியாக, எந்த ஒரு சிரமமும் இல்லாமல் செய்துவிடுவார், ஏன் என்றால், அவருக்கு அந்த வேலையில் அதிக வருடம் அனுபவம் இருப்பதினால்.

இதில், அவரது மனது மற்றும் உடல், ஒரு அசட்டு தைரியத்தையும் அதீத தன்னம்பிக்கையையும் மற்றும் சரியான கணிப்பையும் பெற்றிருக்கும், இந்த ஒரு செயல் அவரது வேலையை எப்படி அவருக்கு சாதகமாக அமைத்து கொடுக்கிறதோ, அதே போல ஏதாவது ஒரு நொடிப்பொழுதில், அவருக்கு பாதகமாக கூட அமைத்து கொடுத்துவிடும், எப்படியென்றால், அவரை சுற்றியுள்ள சூழ்நிலை எப்பொழுதாவது மாறும்பொழுது, அவர் சரியான கணிப்புடன் தான் இருப்பார், ஆனால் அவரை சுற்றியுள்ள சூழ்நிலை தற்சமையம் மாறியிருப்பது, அவரது உடலுக்கும் மனதுக்கும் தெரிந்திருந்தாலும் ஒரு நொடிப்பொழுது, அவரை எப்பொழுதுமுள்ள பழைய சூழ்நிலைக்கு கொண்டு சென்றுவிடும், அந்த நேரத்தில் அவரது கணிப்பு தவறாக முடிந்துவிடும். 

இந்த எடுத்துகாட்டுகளை எல்லாம் வைத்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஒரு மகிழுந்துவை ஒட்டி செல்லும் ஓட்டுனர் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் பொழுது அவரது கண்ணுக்கு பார்க்குமிடமெல்லாம் ஒரே வெளிச்சம் மட்டும் தெரியும், அது எதிரில் வரும் வாகனத்தின் வெளிச்சமாக இருக்கலாம், அல்லது சாலையில் உள்ள விளக்கு கம்பத்தில் உள்ள வெளிச்சமாக இருக்கலாம். இது அவருக்கு அடிக்கடி திரும்ப, திரும்ப பார்க்கின்ற, ஒரு செயலாக தான் இருக்கும், அப்பொழுது அவரது கண் எதிரே உள்ள கண்ணாடியில், அவருக்கு தெரியும் வெளிச்சமானது, ஒரு தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்வு போல, ஒரு நொடிப்பொழுது ஏற்பட்டு விட்டாலும், அந்த ஒரு நொடிப்பொழுதில் எதிரில் உள்ள சாலையில் திருப்பம் திரும்ப வேண்டிய தருணமாக இருந்தால் என்ன நடக்கும் மிக பெரிய தவறு நடந்து விடும்.

நான் இவ்வளவு நேரம் இந்த எடுத்துக்காட்டுகளையெல்லாம், ஏன் சொன்னேன் என்று இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நம்புகிறேன். 

பல வருடம் பணியாற்றும் அந்த மாலுமி கூட தனது கண்ணெதிரே இருக்கும் கடலையும், அந்த கப்பலில் உள்ள ஏணி படியையும், பார்த்து பார்த்து, நல்ல அனுபவம் உள்ளவராக மாறி, ஒரு அசட்டு தைரியம் மற்றும் அதீத தன்னம்பிக்கை மற்றும் சரியான கணிப்பு கொண்டுள்ளவராக மாறி விடுகிறார்.

இதனால் இந்த அசட்டு தைரியம் அவருக்கு ஒரு சில நேரங்களில் தனது கவசமான பாதுகாப்பு உடையை கூட அணிய மெத்தனத்தை ஏற்ப்படுத்தி விடும்.

ஒரே இடத்தில் படும் வெளிச்சமானது அவரது கணிப்பை ஒரு நொடிப்பொழுதில் தற்பொழுதுள்ள சூழலையை மாற்றி அமைக்க கூட சந்தர்ப்பம் இருக்கிறது.

இதனால் தான், நமது முன்னோர்கள் எப்பொழுதுமே விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்று அறிவுரித்தி விட்டு சென்றனர். 

இது என்னுடைய கணிப்பு, இதில் எந்த ஒரு மாற்று கருத்து இருந்தாலும், எனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

——————————————————————————————————————————–

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top