என்னை பற்றி

வணக்கம், நான் முகிலன் வேலாயுதம், கடந்த 35 வருடங்களாக வைரம் பட்டை தீட்டும் பட்டறையில் பணியாற்றி வருகிறேன். எனக்கு புதுமையான படைப்புகள் படைக்க விருப்பம், மற்றும் நடைமுறை வாழ்க்கையில் வரும் சிக்கல்களுக்குண்டான தீர்வாக எளிமையான வழிமுறைகள், ஏதாவது இருக்குமா என்று சிந்திப்பது எனது வழக்கம், நான் பணியாற்றும் நிறுவனத்தில் பல புதிய படைப்புகளை படைத்திருக்கிறேன், பல சிக்கல்களுக்கு தீர்வாக பல மாற்றங்களையும், ஏற்படுத்தி அந்த சிக்கல்களை நிவர்த்தி செய்திருக்கிறேன்.

அது போல, இவ்வுலகில் நம்மை சுற்றியுள்ள நமது வாழ்க்கையில் எண்ணற்ற சிக்கல்கள் இருப்பதையும், அதற்குண்டான தீர்வுகளை, நம்மால் முடிந்த அளவுக்கு, இலகுவான முறையில் கொண்டு வர முடியும், என்ற நம்பிக்கையில் இந்த கணினி உலகில் உங்களை இணையதளம் மூலமாக தொடர்புண்டுள்ளேன். என்னுடைய கருத்துக்களை வாசிக்கும் உங்களில் யாருக்காவது, என்னுடைய கருத்து மற்றும் ஆலோசனை சரியாக இருக்கிறது, என்று தோன்றினால் அதை எனக்கு தெரிவிக்கவும், அல்லது சரியில்லை என்று தோன்றினாலும் அதையும் எனக்கு தெரிவிக்கவும், அல்லது உங்களில் யாருக்காவது என்னுடைய கருத்து மற்றும் ஆலோசனை மற்றும் தொழில் நுட்ப யோசனை பிடித்திருந்தால், அதை நீங்கள் சோதனை செய்து நடைமுறை படுத்த முயற்சித்தால், எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

அதையும், எனக்கு தெரிவிக்கவும், அதில் எனக்கு ஒரு மகிழச்சி கிடைக்கும் என்னுடைய சிந்தனை இந்த உலகிற்கு ஒரு உபயோகரமாக இருக்கிறது என்று நான் நினைப்பேன்.

என்னை பொறுத்தவரையில், இப்பொழுதுள்ள பள்ளி, மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை, ஊக்குவிக்கும் அளவிற்கு, எந்த ஒரு செயல்பாடுகளும் தேவைகேற்ப இல்லை, என்று தான் நினைக்கிறேன்.

பள்ளி மாணவர்கள், படிப்பு முடித்து வெளி உலகிற்கு வரும்போது, அவர்கள் நடைமுறை வாழ்க்கையில், எண்ணற்ற சிக்கல்களை எதிகொள்ளுமாறு இருக்கிறது, அவர்களுக்கு அவர்கள் படித்த படிப்பு நடைமுறை சிக்கல்களை சரிசெய்ய போதுமானதாக இல்லை, இதனால் தான் நான் இப்படி நினைக்கிறேன்.

மற்றும், எந்த ஒரு அரசாங்கமும், அல்லது நிறுவனமும், தனது நடைமுறை  சிக்கல்களை, ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களை, வைத்து மட்டும் தான் கலந்தாலோசித்து முடிவெடுத்து தீர்வுகளை கொண்டுவருகின்றனர். மாறாக, பொது மக்களிடமோ, அல்லது வளர்ந்துவரும் விஞ்ஞானிகளான மாணவர்களிடமோ, எந்த ஒரு கருத்து கணிப்பையோ அல்லது உதவியையோ அல்லது யோசனையையோ கேட்பதில்லை.

இதனால் மாணவர்களும் சரி, பொதுமக்களும் சரி, அவர்கள் நமக்கு என்ன வந்திருக்கிறது, அது நமது வேலை இல்லை, ஆகையினால் நாம் அந்த சிக்கலுக்கு தீர்வு காணவேண்டிய அவசியமில்லை என்று ஒதுங்கிவிடுகின்றனர். 

இதில் கவனிக்கவேண்டிய விடயம், என்னவென்றால் இந்த பொதுமக்களில் உள்ளவர்களில் யாரோ ஒருவர் தான், அல்லது இந்த மாணவர்களில் உள்ள யாரோ, ஒரு மாணவர்தான் நாளை இந்த பணிக்கு வரப்போகிறார் என்று தெரிந்தும் தெரியாதது போல நடந்துகொண்டிருக்கிறார்கள், அரசாங்கமும் மற்றும் நிறுவனங்களும் இது தான் உண்மை,

இந்த உண்மையை அரசாங்கமும், தனியார் நிறுவனமும் ஒத்துக்கொண்டால் பல கல்லூரிகளில், பல சிக்கல்களுக்குண்டான ஆராய்ச்சி கூடங்கள் நிறைந்திருக்கும், மற்றும் அதற்காகவே தனியான பட்டப்படிப்பு நடத்தப்பட்டிருக்கும்,

மற்றும் உலகில் எந்த ஒரு சிக்கலுக்கும் உடனே தீர்த்து வைக்கப்பட்டு, அடுத்து, எந்த ஒரு சிக்கலும் உருவாகாமல் இருக்க முன்னரே திட்டமிட்டு தடுக்கப்படும்.

இவை, அனைத்திற்க்கும் காரணமான இந்த உலகை முன்னேறவிடாமல் தடுத்து தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் சுயநலவாதிகளாலும், இயலாதவர்களாலும், நடத்தப்படும் நாடாகமான காப்புரிமை சட்டம் காணாமல் போய், உலகம் முன்னேற்ற பாதையில் ஓடிக்கொண்டிருக்கும்.    ஞானம் என்பது அறிவை பெருக்கத்தான், பந்தயத்தில் ஓடும் குதிரை போன்று ஓடுவதற்கு அல்ல, என்பதை அரசாங்கமும் மற்றும் பெற்றோர்களும் உணர்ந்து கொள்ளாத வரை இதே நிலமை தான் இருக்கும்.   

Scroll to Top